திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
x

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட் ஒதுக்கீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் பிற்பகல் 2 மணியளவிலும் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் மார்ச் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story