ஆந்திரா: ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த 3000 வாத்துக்கள் பலி


ஆந்திரா: ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த 3000 வாத்துக்கள் பலி
x

ஆந்திரா அருகே மேய்ச்சலுக்கு சென்ற 3000 வாத்துக்கள் ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் முனி ராஜா. இவர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குறித்த 3 வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இருந்தன. இதனை கண்ட முனி ராஜா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.

ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாழ்த்துக்கள் இறந்தது தெரிய வந்தது. தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story