சாலை விபத்து: பெங்களூருவில் கடந்த ஆண்டு மட்டும் 318 பேர் உயிரிழப்பு


சாலை விபத்து: பெங்களூருவில் கடந்த ஆண்டு மட்டும் 318 பேர் உயிரிழப்பு
x

Representational image: PTI

தினத்தந்தி 13 Nov 2022 6:39 PM IST (Updated: 13 Nov 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் பெங்களூரு 3-வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெயர் உண்டு. இங்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் கொட்டி கிடக்கின்றன. இதுபோன்ற முன்னணி நகரங்களில் சாலைகள் மோசமாக உள்ளதால் விபத்துகள் நடக்கின்றன.

இந்த நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் பெங்களூரு 3-வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. நாட்டில் டெல்லி, மும்பை உள்பட 53 பெருநகரங்களை மையமாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு சம்பவங்கள் பெங்களூருவில் அதிகம் நடப்பதும், இது இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளதும் தெரியவந்ததுள்ளது.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 3,213 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன. மேலும், கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக 5,021 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 318 பேர் இறந்துள்ளனர்.


Next Story