நேபாளத்தில் மலையேற்றம் சென்ற இந்தியர் மாயம்: தேடும் பணி தீவிரம்
இமய மலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் மலைப் பகுதிகள் அதிகம் உள்ளன.
காத்மாண்டு,
இமய மலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் மலைப் பகுதிகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மலைப்பகுதிகளில் பலரும் மலையேற்றம் செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு நேபாளத்தில் மலையேற்றம் சென்று இருந்தார். இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னா மலையை சென்றடைய அனுராக் மாலு திட்டமிட்டு இருந்தார்.
அன்னபூர்னா சிகரத்தை நோக்கி நேற்று காலை தனது பயணத்தை தொடங்கிய அனுராக் மாலுவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மலையேற்ற குழுவின் பொறுப்பாளர் மிங்மா ஷெர்பா, அனுராக் மாலு காணவில்லை என்ற தகவலை வெளியிட்டார். அனுராக் மாலுவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story