தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - 4 பேர் காயம்...!
புதுச்சேரி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
சேதராப்பட்டு,
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி நளினி உள்ளிட்ட 4 பேர் இன்று சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்த கார் திண்டிவனம்-புதுவை சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி உரசுவது போல் வந்தது.
இதனால் காரை ஓட்டிய நளினி பயந்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி உள்ளார். இந்த விபத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story