பீகாரில் படகில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது.
பாட்னா,
பீகார் தலைநகர் பாட்னாவின் மானேர் பகுதி வழியாக செல்லும் சோனே நதியில் நேற்று மோட்டார் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் இருந்தவர்கள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி உணவு சமைத்துக்ெகாண்டிருந்தனர்.
அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கரைக்கு கொண்டு வந்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
படகில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story