பஸ்சில், வியாபாரியின் தங்கநகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது


பஸ்சில், வியாபாரியின் தங்கநகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது
x

பஸ்சில், வியாபாரியின் தங்கநகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு: மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஈஸ்வர் தாவர்சந்த். நகை வியாபாரியான இவர், வியாபாரம் விஷயமாக கடந்த 14-ந்தேதி மும்பையில் இருந்து மங்களூருவுக்கு தனியார் சொகுசு பஸ்சில் வந்துள்ளார். உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா சிரூர் அருகே சாலையோரம் உள்ள ஓட்டலில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. அதன்படி வியாபாரி ஈஸ்வர் தாவர்சந்த் உள்ளிட்டோர் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் காரில் வந்த மர்மநபர்கள், பஸ்சுக்குள் சென்று ஈஸ்வர் தாவர்சந்த் இருக்கையில் இருந்த பையுடன் 466 கிராம் தங்கநகைகளை கொள்ளையடித்துகொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து ஈஸ்வர் தாவர்சந்த் பைந்தூர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து பஸ்சில் புகுந்து தங்கநகைளை கொள்ளையடித்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அம்ஜத்கான்(வயது 33), இக்ரார்கான்(வயது 30), கோபால்(வயது 35) மற்றும் அலிகான்(வயது 31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகைகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story