சிறுமி உடலை சாலையில் இழுத்துச்சென்ற 4 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த 21-ந்தேதி ஒரு சிறுமியின் உடல் மிதந்தது. அவள் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, உள்ளூர் மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
உடலை அப்புறப்படுத்த வந்த போலீசார், அந்த உடலை சாலையில் இழுத்துச் சென்றனர். இக்காட்சி, வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்
Related Tags :
Next Story