47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றம்


47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றம்
x

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் இம்மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடக்கிறது

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் இம்மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடக்கிறது.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதி மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான மாநில மந்திரிகள் குழுவின் அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. சூதாட்ட விடுதிகள், பந்தய மைதானங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் ஸ்ரீநகரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது ஸ்ரீ நகருக்கு பதிலாக ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டிகருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story