அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்
x

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே மூன்று முறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதன்பிறகு 3-வது முறையாக கடந்த 3-ந் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மாநிலங்களவை தேர்தல், குடியரசு தின விழா ஏற்பாடுகள் ஆகிய காரணங்களை காட்டி அவர் செல்லவில்லை.

இந்த நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய மூன்று சம்மன்களையும் புறக்கணித்த இந்த முறை விசாரணைக்க்கு ஆஜராவாரா? அல்லது புறக்கணிப்பாரா என்ற பரபரப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.


Next Story