ராஜஸ்தான்: வேகமாக வந்த கார் நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியதில் 5 பேர் உயிரிழப்பு..!
ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் சதார் காவல் நிலையப் பகுதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று நின்று கொண்டிருந்த இரண்டு டிரக்குகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். டிரக்குகளுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி ஒருவரும் உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். விபத்தால் உயிரிழந்த காவலாளியின் உறவினர்கள் சார்பில் காரை ஓட்டிவந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story