மத்திய பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் சுட்டுக்கொலை
மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின், தாதியா மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ணையில் மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவின் சொந்த மாவட்டம் தாதியா என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story