நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கீடு
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரசு அரசு, தேர்தலின் போது அளித்த 5 இலவச திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்றும், அவர்கள் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களை தவிர்த்து மற்ற பஸ்களில் மாநிலம் முழுவதும் சென்று வரலாம் என்றும் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த திட்டம் வருகிற 11-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஒரு அரசு பஸ்சில் முழுவதுமாக பெண்கள் மட்டும் செல்ல முடியாது என்றும், ஆண்களுக்காக 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார். இதன்மூலம் கர்நாடக அரசு பஸ்களில் ஆண்கள் பயணம் செய்ய 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்திருந்தார். நாட்டிலேயே முதல் முறையாக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்குவது இதுவே முதல் முறையாகும். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் போது, முழுமையாக பெண்களே இருக்கையில் அமர்ந்து கொண்டால் ஆண்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் பெண்களே பயணித்தால், அந்த பஸ் மூலமாக போக்குவரத்து துறைக்கு ஒரு பைசா கூட வருவாய் கிடைக்காது. இதுபோன்ற காரணங்களால் தான் அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.