பஞ்சாப்பில் டி.வி. கேட்டு சிறை கைதிகள் உண்ணாவிரத போராட்டம்


பஞ்சாப்பில் டி.வி. கேட்டு சிறை கைதிகள் உண்ணாவிரத போராட்டம்
x

பஞ்சாப்பில் டி.வி. கேட்டு சிறை கைதிகள் உண்ணாவிரத போாரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள சிறையில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் டி.வி. வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், "சிறைச்சாலையில் உள்ள மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரத்துக்கும் அதிகமாக உண்ணாவிரத போாரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டி.வி. வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகளை அதிகரிக்க வேண்டும், கைதிகளை வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் சிறை அறைகளில் அடைப்பதற்கு பதிலாக சிறையில் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்" என கூறினார்.


Next Story