இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா - தொற்றுக்கு 2 பேர் பலி


இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா - தொற்றுக்கு 2 பேர் பலி
x

இந்தியாவில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் வெறும் 26 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று அது இருமடங்காக உயர்ந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,49,94,407 ஆக உயர்ந்தது.

நேற்று கொரோனா தொற்றால் மராட்டிய மாநிலம் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 5,31,910 ஆக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக இருந்தது.

1 More update

Next Story