சென்னைக்கு 5ஜி அறிமுகம் ; ஸ்ரீஆகாஷ் அம்பானி அறிவிப்பு


சென்னைக்கு 5ஜி அறிமுகம் ; ஸ்ரீஆகாஷ் அம்பானி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 6:00 PM IST (Updated: 22 Oct 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஆகாஷ் அம்பானி, ஜியோ ட்ரூ 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாரா வில் அறிமுகப்படுத்தினார்.

புதுடெல்லி

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கிவருகின்றன.

இந்த பொதுமக்கள் பயன்படுத்தும் 5ஜி வைபை மூலம் 1ஜிபி/நொடி அளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்தமுடியும். சென்னையில் 5ஜி சேவையை ஜியோ தொடங்கியுள்ளது. தேர்ந்து எடுக்கபட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது 5ஜி சேவைக்கான அணுகலைப் பெறுவார்கள் மேலும் அவர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வினாடிக்கு 1 ஜிகாபிட் வரை அணுக முடியும்.

இதுகுறித்து பேசிய ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி பேசும் போது கூறியதாவது;-

இன்று இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது. 5ஜி சலுகை பெற்ற சிலருக்கோ அல்லது நமது பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கோ பிரத்யேக சேவையாக இருக்க முடியாது. 5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஜியோ நிறுவனம் மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தளங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் இதனை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வரும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. "முன்பு கூறியதை போலவே இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் முதல்கட்டமாகவும் பின்னர் அனைத்து இடங்களுக்கும், அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.


Next Story