2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு - தற்கொலை கடிதம் சிக்கியது


2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு - தற்கொலை கடிதம் சிக்கியது
x

அரியானாவில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

அம்பாலா,

அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள பலனா கிராமத்தில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து அம்பாலா துணைக் கண்காணிப்பாளர் ஜோகிந்தர் சர்மா கூறும்போது, சங்கத் ராம் (வயது 65), அவரது மனைவி மஹிந்திரா கவுர், சுக்விந்தர் சிங் (வயது 34) மற்றும் அவரது மனைவி ரீனா, சுக்விந்தர் சிங்கின் இரண்டு மகள்கள் ஆஷு (வயது 5) மற்றும் ஜஸ்ஸி (வயது 7) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்து கிடந்தனர்.

சம்பவ இடத்திற்கு குற்றப் புலனாய்வுக் குழு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

1 More update

Next Story