மூதாட்டி கொலையில் 6 பேர் கைது


மூதாட்டி கொலையில் 6 பேர் கைது
x

பெங்களூருவில் மூதாட்டி கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ (வயது 82). இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை மர்நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீயை கொலை செய்ததாக நேபாளத்தை சேர்ந்த 3 காவலாளிகள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் ஜெயஸ்ரீ தனியாக வசிப்பதை நோட்டமிட்ட 6 பேரும் திட்டம் தீட்டி ஜெயஸ்ரீயை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்து உள்ளது.


Next Story