ஜோதிடரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட 6 பர் கைது


ஜோதிடரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட 6 பர் கைது
x

ஜோதிடரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட 6 பர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் பிரமோத், ஜோதிடர். கடந்த வாரம் இவரது வீட்டுக்குள் புகுந்த மாமநபர்கள் கத்தியை காட்டி மிரட்டியும், பிரமோத்தை தாக்கியும் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தார்கள். இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஒரு பெண் உள்பட 6 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், மைசூரு ரோடு, ஞானபாரதியை சேர்ந்த டாமனிர் ரிச்சர்ட் (வயது 25), மேகனா (27), ராஜு (22), சுரேஷ் (21), வினோத் (24), பதம் (21) என்று தெரிந்தது.

சமீபத்தில் ஜோதிடம் பார்க்க மேகனா, பிரமோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கடனுக்கு பணம் கொடுக்கும்படி மேகனா கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று பிரமோத் கூறியுள்ளாா். அவரிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொண்ட மேகனா கூலிப்படையை ஏவி பிரமோத் வீட்டில் கொள்ளையடிக்க வைத்தது தெரியவந்தது. கைதான 6 பேரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.64 அயிரம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story