பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 65 ஆயிரம் விவசாயிகள் பதியவில்லை


பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 65 ஆயிரம் விவசாயிகள் பதியவில்லை
x
தினத்தந்தி 30 Jun 2023 3:35 AM IST (Updated: 30 Jun 2023 3:35 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 65 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்யவில்லை என்று கலெக்டர் குமார் தெரிவித்துள்ளார்.

மண்டியா:-

ஆலோசனை கூட்டம்

மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமார், வருவாய்த் துறை, தாசில்தார், வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் 65 ஆயிரம் விவசாயிகள் தங்களின் கே.ஒய்.சி.யை பதவி செய்யாமல் உள்ளனர். மேலும் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள், அதில் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதனால், பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை துரிதப்படுத்த தாசில்தார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஒத்துழைக்க வேண்டும்

மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் பதிவு செய்யாத 65 ஆயிரம் விவசாயிகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம். வருவாய் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று இந்த திட்டத்தில் விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் 10 நாட்களுக்குள் மண்டியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது கூடுதல் கலெக்டர் நாகராஜ் உள்பட பலர் இருந்தனர்.


Next Story