லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலம் கதிகாரில் லாரி மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கதிகார்,
பீகார் மாநிலம் கதிகாரில் லாரி மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை 81 திக்ரி பெட்ரோல் பம்ப் அருகே கெரியா கிராமத்தில் இருந்து கதிகார் நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் மத்திய பிரதேசத்தின் இடார்சிக்கு ரெயிலை பிடிப்பதற்காக கதிகாருக்கு சென்று கொண்டிருந்தனர். விபத்தையடுத்து கிராம மக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.