பணமதிப்பிழப்பு நடந்து 7 ஆண்டுகள் நிறைவு... கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே


பணமதிப்பிழப்பு நடந்து 7 ஆண்டுகள் நிறைவு... கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
x

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் ஏன் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பண மதிப்பு நீக்கம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் தாக்கம் இன்று வரை இந்தியர்களுக்கு பெரும் காயத்தை உண்டாக்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 50 நாட்கள் போதும் என்று பிரதமர் மோடி கேட்டார். ஆனால் 7 வருடங்கள் கடந்தும் அதற்கான பதில்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக 150 பேர் உயிரிழந்தது ஏன்? கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா? 2016-க்கு பிறகு பயங்கரவாத சம்பவங்களும் நக்சல் வன்முறைகளும் நின்று விட்டதா? 2000 ரூபாய் நோட்டுகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மல்லிகார்ஜுன கார்கே எழுப்பி உள்ளார்.


Next Story