'பிராண்ட் பெங்களூரு' திட்டத்துக்கு 70 ஆயிரம் பேர் கருத்து: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்


பிராண்ட் பெங்களூரு திட்டத்துக்கு 70 ஆயிரம் பேர் கருத்து: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

‘பிராண்ட் பெங்களூரு’ திட்டத்துக்கு 70 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார். பசவராஜ் பொம்மை சட்டசபையில் என்ன பேசினாரோ, அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம்.

பிராண்ட் பெங்களூரு திட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதனை பரிசீலிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சிறப்பான கருத்துகளை மட்டும் தேர்வு செய்வார்கள். பிராண்ட் பெங்களூரு திட்டம் குறித்து நாளை (அதாவது இன்று) பெங்களூரு ஞானஜோதி அரங்கில் நடைபெறும் ஆலோசனையில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story