2023-ம் ஆண்டில் இதுவரை இந்தியர்களுக்கு 71,600 விசாக்கள்; சீன தூதரகம்


2023-ம் ஆண்டில் இதுவரை இந்தியர்களுக்கு 71,600 விசாக்கள்; சீன தூதரகம்
x
தினத்தந்தி 12 July 2023 6:47 AM IST (Updated: 12 July 2023 7:14 AM IST)
t-max-icont-min-icon

2023-ம் ஆண்டின் முதல் பாதி வரை இந்தியர்களுக்கு 71,600-க்கும் மேற்பட்ட விசாக்களை சீனா வழங்கி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் ஜியாவ்ஜியான் கூறும்போது, வர்த்தகம், படிப்பு, சுற்றுலா, பணி, குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது போன்ற நோக்கங்களுக்காக இந்தியர்களுக்கு சீனா சார்பில் விசா வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, 2023-ம் ஆண்டின் முதல் பாதி வரை, சீனாவுக்கு பயணம் செய்ய கூடிய இந்திய நாட்டினருக்கு 71,600-க்கும் மேற்பட்ட விசாக்களை சீன தூதரகம் வழங்கி இருக்கிறது என கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில், 60 ஆயிரத்திற்கும் கூடுதலான விசாக்களை சீனா செல்ல கூடிய இந்தியர்களுக்கு சீன தூதரகம் வழங்கி உள்ளது என வாங் கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்தியா உள்பட வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது என சீனா அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.


Next Story