மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.!
மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
39 வயதான அந்த நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்போது ஒரு செவிலியர் அறையின் தாழ்ப்பாள் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, சுயநினைவின்றி இருந்த மூதாட்டியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வதைக் கண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த செவிலியர், மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
Related Tags :
Next Story