உத்தர பிரதேசத்தில் 7-வது 'இயற்கை மற்றும் பறவைகள் திருவிழா' பிப்ரவரி 1-ந்தேதி தொடக்கம்
இயற்கை மற்றும் பறவைகள் திருவிழாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில், விஜய்சாகர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு உத்தர பிரதேச மாநில அரசின் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் 7-வது 'இயற்கை மற்றும் பறவைகள் திருவிழா' நடைபெற உள்ளது.
இந்த திருவிழா வரும் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறும் எனவும், இதனை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவின் போது சர்வதேச நாடுகளில் இருந்து இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள், பறவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள், நிபுணர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story