உத்தரகாண்ட்: பொது இடத்தில் மத வழிபாடு செய்த 8 பேர் கைது


உத்தரகாண்ட்: பொது இடத்தில் மத வழிபாடு செய்த 8 பேர் கைது
x

பொது இடத்தில் மத வழிபாடு செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் சிவலிங்க நகர் பகுதியில் வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தையில் நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் மத வழிபாடு செய்தனர். மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பொது இடமான வாரச்சந்தையில் மத வழிபாடு நடத்திய நிகழ்வு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து பொது இடத்தில் உரிய அனுமதியின்றி மத வழிபாடு நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இதுபோன்ற செயலில் இனி ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்த கோர்ட்டு 8 பேருக்கும் ஜாமின் வழங்கியது.


Next Story