லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி - திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்
லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இன்று பார்மீர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்க சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் காரி பயணம் செய்தனர்.
பார்மீர் மாவட்டத்தின் குடா மலானி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதியது.
இந்த கோரவிபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story