கர்நாடகத்தில் மழைக்கு 9 பேர் பலி
கர்நாடகத்தில் பெய்த மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல இடங்களில் நேற்று முன்தினம் இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூருவில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை ஒட்டு மொத்த நகரையே புரட்டி போட்டது. சூறைக்காற்று வீசியதால் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
இந்த நிலையில், பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மின்னல் தாக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக சிறுவன் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story