நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி


நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 1 Sep 2023 12:11 PM GMT (Updated: 1 Sep 2023 12:12 PM GMT)

93 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது.

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், பலர் இன்னும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93% நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76% வைப்புத் தொகையாகவும் 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.


Next Story