97 சதவீதம் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பபெறப்பட்டன - ரிசர்வ் வங்கி


97 சதவீதம் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பபெறப்பட்டன - ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 1 Jan 2024 3:55 PM GMT (Updated: 1 Jan 2024 3:57 PM GMT)

ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.

புதுடெல்லி,

2023 டிசம்பர் 29-ம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பின், ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் ரூ.2000 நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிசம்பர் 29ம் தேதி, ரூ.9,330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story