சிருங்கேரி அருகே பள்ளிக்குள் புகுந்த 14 அடி நீள நாகபாம்பு பிடிபட்டது


சிருங்கேரி அருகே  பள்ளிக்குள் புகுந்த 14 அடி நீள நாகபாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:46 PM GMT)

சிருங்கேரி அருகே பள்ளிக்குள் புகுந்த 14 அடி நீள நாகபாம்பு பிடிபட்டது

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா கெரமனேவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளிக்குள் நேற்று 14 அடி நீள நாகபாம்பு புகுந்தது. லையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறையில் நாகப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர். பின்னர் இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தனர்.

அவர் பாம்பு பிடி வீரரான ஜெயகுமார் என்பவருக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பாம்பு பிடி வீரர் ஜெயகுமார், வகுப்பறைக்குள் இருந்த பாம்பை வெளியே வரும்படி செய்தார். பின்னர் அந்த பாம்பை லாவமாக உயிருடன் பிடித்து சாக்குபையில் அடைத்தார்.

இதையடுத்து சாக்குபையுடன் அந்த பாம்பை கொண்டு சென்ற அவர் சிருங்கேரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதையடுத்து வழக்கம்போல வகுப்புகள் நடந்தது.

இதேபோல மண்டியா டவுனில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டர் பெட்டில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பெண் சாலையோரம் ஸ்கூட்டரை நிறுத்தி பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது ஸ்கூட்டர் பெட்டிக்குள் விரியன் பாம்பு பதுங்கி இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஸ்கூட்டரை அங்கே விட்டுவிட்டு ஓடினார். பின்னர் இதுகுறித்து பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த அவர் ஸ்கூட்டர் பெட்டியில் பதுங்கியிருந்த விரியன் பாம்புவை பிடித்தார். பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு, மண்டியா வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.


Next Story