டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - உயிர் சேதம் ஏதும் இல்லை...!


டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - உயிர் சேதம் ஏதும் இல்லை...!
x

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி,

டெல்லி சாஸ்திரி நகரில் 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் வசிப்பதற்கு உகந்ததல்ல என்பதால் அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டனர். கட்டிடம் காலியாக இருந்ததால் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் நடந்து சென்றவர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா? என்ற தகவலும் வெளியாகவில்லை. கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story