கேரளாவின் இளம் அரசியல் தம்பதிக்கு பெண் குழந்தை - டுவிட்டரில் குவியும் வாழ்த்து


கேரளாவின் இளம் அரசியல் தம்பதிக்கு பெண் குழந்தை - டுவிட்டரில் குவியும் வாழ்த்து
x

பெண் குழந்தை பிறந்த தகவலை சச்சின் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருவனந்தபுரம்,

நாட்டின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டமன்றத்திலேயே இளம் எம்.எல்.ஏ.வாக உள்ள சச்சின் தேவ் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த இளம் அரசியல் தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை சச்சின் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ஆர்யா-சச்சின் தம்பதிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.



Next Story