எதிரே கடந்து சென்ற போயிங் விமானம் - நடுவானில் சிறிது நேரம் நின்ற இண்டிகோ விமானத்தின் என்ஜின்


எதிரே கடந்து சென்ற போயிங் விமானம் -  நடுவானில் சிறிது நேரம் நின்ற இண்டிகோ விமானத்தின் என்ஜின்
x

போயிங் விமானம் எதிர் திசையில் கடந்து சென்றதில் இண்டிகோ விமானத்தின் என்ஜின் சிறிது நேரம் நடுவானில் நின்றதற்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஏறக்குறைய 36 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது, விமானத்தின் என்ஜின் 1 நின்றதற்கான எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது.

இதனை விமானி கவனித்து உள்ளார். எனினும், சிறிது நேரத்தில் அது மறைந்து விட்டது. மிக அரிய நிகழ்வாக ஏற்படும் இதுபோன்ற சமயத்தில் விமானிகள் எச்சரிக்கையுடன் இருந்து, செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு தெரிவித்து உள்ளது.

எதிரே வந்த அமீரகத்தின் பெரிய ரக போயிங் (பி-777) விமானம் விரைவாக கடந்து சென்றதில் இண்டிகோ விமானத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், பாதுகாப்புடன் பயணிகளை சுமந்து கொண்டு இண்டிகோ விமானம் மும்பையில் தரையிறங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள், எதிரே வரும் விமானத்தின் எடை, இறக்கை நீளம், விமானத்தின் உருவம், அந்த விமானத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் பயணம் செய்கிறது உள்ளிட்ட விசயங்கள் அடிப்படையில் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில சமயங்களில், கண்டு கொள்ள அவசியமில்லாத பாதிப்பில் இருந்து பேரிடர் ஏற்படுத்த கூடிய பாதிப்பு வரை இதனால் ஏற்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த சம்பவம் பற்றி இண்டிகோ விமான நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டது.


Next Story