அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது
தட்சிண கன்னடாவில் அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மங்களூரு:-
பெல்லாரி மாவட்டம் கூட்லகி தாலுகா சிக்கஜோகி கிராமத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் நேற்று முன்தினம் சபரிமலைக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். தட்சிண கன்னட மாவட்டம் பெல்தங்கடி தாலுகா முண்டாஜே அருகே உல்லால் திகட்டே பகுதியில் சென்றபோது, பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் பதற்றம் அடைந்தது. டிரைவரும் பதற்றத்தில் பஸ்சை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற பஸ் சாலையோரம் இருந்த சிறிய மரத்தில் மோதி நின்றது. இதில் அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரகு, சசி, பசவராஜ், ஜலஹாரா ஆசியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு பெல்தங்கடியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பஸ்சை மீட்டனர். இந்த விபத்து குறித்து பெல்தங்கடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.