புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வருகிற 24-ம் தேதி அமைச்சரவை கூட்டம்


புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வருகிற 24-ம் தேதி அமைச்சரவை கூட்டம்
x

கோப்புப்படம்

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வருகிற 24-ம் தேதி அமைச்சரவை கூடுகிறது.

புதுச்சேரி,

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளதுபோல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ஒதுக்கீடு குறித்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், தற்போது உள்ஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சருக்கு துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து முடிவெடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வருகிற 24-ம் தேதி மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது. இதைத்தொடர்ந்து, துணைநிலை கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்புக் கல்வி ஆண்டிலேயே 10 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story