"ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்" - சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி


ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும் - சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி
x

வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறினார்.

புதுடெல்லி,

ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்படி முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற்றதை ஒட்டி, வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நீதிபதி யு.யு. லலித், அவருடைய பதவி காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய முன்மொழிவுகள் குறித்து பட்டியலிட்டார்.

அதில், ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும்படி முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், வழக்குகள் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என கூறினார்.

அவசர வழக்குகளை விசாரிக்க கோரி உரிய அமர்வு முன் முறையிடும் நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story