இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற டிரோன் விரட்டியடிப்பு


இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற டிரோன் விரட்டியடிப்பு
x

கோப்புப்படம் 

பாகிஸ்தான் எல்லைக்கு டிரோன் திரும்பியதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு,

காஷ்மீரின் சம்பா மாவட்டம் ராம்கர் செக்டார் அருகே சாம்லியால் எல்லை சாவடியில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து சிவப்பு நிற லேசர் ஒளியுடன் டிரோன் ஒன்று எல்லைப்பகுதியை ஊடுருவ முயன்றது.

சுதாரித்துகொண்ட பாதுகாப்புப்படை வீரர்கள் அதை நோக்கி சுட்டனர். உடனே வந்தவேகத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அந்த டிரோன் திரும்பியதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உளவு பார்க்க அந்த டிரோன் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை சப்ளை செய்யவும் பயங்கரவாதிகள் தற்போது டிரோன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.


Next Story