அரியானாவில் பிரபல யூ-டியூப் தம்பதியினர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்த யூ-டியூப் தம்பதியினர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சண்டிகர்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர்கள் கிராவித்(25) மற்றும் நந்தினி(22). பிரபல யூ-டியூபர்களான இவர்கள் இருவரும் அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கிராவித்-நந்தினி தம்பதியினர் இன்று அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பிரபல யூ-டியூப் தம்பதியினர் திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story