'அடுத்த ஆயிரம் ஆண்டுகள் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான நாள்' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்


அடுத்த ஆயிரம் ஆண்டுகள் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான நாள் - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
x

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி மும்பையில் உள்ள ராமர் கோவிலில் பியூஷ் கோயல் வழிபாடு செய்தார்.

மும்பை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ராமர் குறித்த பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில் மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய மாநிலம் மும்பை அருகே வதாலா பகுதியில் உள்ள ராமர் கோவிலில் நேற்று வழிபாடு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "500 வருட போராட்டத்தின் வெற்றிக்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். நாட்டில் ஒரு புதிய உத்வேகத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இது அடுத்த ஆயிரம் ஆண்டுகள் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான நாளாகும். 140 கோடி இந்தியர்கள் இணைந்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவார்கள்" என்று தெரிவித்தார்.


Next Story