தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் அரசு பள்ளி


தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் அரசு பள்ளி
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

சிட்லகட்டாவில் தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் அரசு பள்ளி ஆசிாியா்களை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ளது தொட்டதாசனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளி 1958-ம் ஆண்டு முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. அப்போது 40 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

பின்னர் இந்த அரசு பள்ளிக்கு நன்கொடை அதிகரித்தது. இதையடுத்து படிப்படியாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. தற்போது 7-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இதுவரை 400 மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம், ஆசிரியர்கள்தான்.

தனியார் பள்ளிக்கு நிகராக இந்த அரசு பள்ளியை கொண்டுவரவேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் செய்தனர். குறிப்பாக மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை ஆடைகளில் அதிகளவு ஆர்வம் செலுத்தினர். அதன்படி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவு மற்றும் நன்கொடை பெற்று, மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆடைகளை வாங்கி வழங்கினர்.

மேலும் ஷூ, நோட்டு, புத்தகம், பேக் ஆகியவற்றை வாங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். இந்த பொருட்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகரானவை என்று கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் நடை, உடை, பாவனங்களில் மாற்றம் ஏற்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஒழுங்கு நடவடிக்கை வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளையும் இந்த அரசு பள்ளியில் சேர்க்க முன் வருகின்றனர்.


Next Story