நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டம் வரும் ஜூன் 12-ந்தேதி நடைபெறும்; ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு


நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டம் வரும் ஜூன் 12-ந்தேதி நடைபெறும்; ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு
x

நாட்டில் மாற்றம் என்பது பீகாரில் இருந்து மட்டுமே தொடங்கும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் இன்று கூறியுள்ளார்.

பாட்னா,

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் மன்ஜித் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டம் வருகிற ஜூன் 12-ந்தேதி நடைபெறும். அது ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரு செய்தியை அனுப்பும்.

நாட்டில் மாற்றம் என்பது பீகாரில் இருந்து மட்டுமே தொடங்கும் என்று கூறியுள்ளார். ஒத்த பார்வைகள் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் நிகழ்வை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாட்னா ஐகோர்ட்டு அருகே, இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாட்னாவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இருந்து, பாட்னா ஐகோர்ட்டு நோக்கி தலைவர்கள் பேரணியாகவும் சென்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு அவமதிப்பு செய்து விட்டது என அக்கட்சி குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.


Next Story