டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை திறப்பு


டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை திறப்பு
x

டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பல்லாயிரக்கணக்கான பரப்பில் பசுமைப் புல்வெளி உருவாக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

28 அடி உயரமுள்ள இந்த சிலை நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள அதே இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மோனோலித்திக் எனப்படும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பையொட்டி நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நாளை முதல் 11 வரை இரவு எட்டு மணிக்கு நடைபெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story