சிறுத்தை, இரும்பு கூண்டில் சிக்கியது
பெங்களூரு அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இரும்பு கூண்டில் சிக்கியது.
நெலமங்களா:-
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகாவில் மல்லர பானாவாடி, கோரஹள்ளி, அனுமந்தே கவுடன பாளையா உள்ளட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை 3 கிராமங்களிலும் நடமாடியது. இதனால் கிராம மக்கள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்து வந்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, வனத்துறையினர் சார்பில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வனத்துறையினர் வைத்திருந்த இரும்பு கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கி இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தையை மீட்டு சென்றார்கள். கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியதால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.