மராட்டிய மாநிலத்தில் பாத்திரத்திற்குள் தலையை விட்டு 5 மணி நேரம் சிக்கித் தவித்த சிறுத்தை


மராட்டிய மாநிலத்தில் பாத்திரத்திற்குள் தலையை விட்டு 5 மணி நேரம் சிக்கித் தவித்த சிறுத்தை
x

வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

மும்பை,

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடந்த பிப்ரவரி 29-ந்தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 13,874 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. இது தவிர மராட்டிய மாநிலம்(1,985), கர்நாடகா(1,879) மற்றும் தமிழ்நாடு(1,070) ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுத்தைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. கிராமத்திற்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை, ஒரு உலோக பாத்திரத்திற்குள் தனது தலையை விட்டுள்ளது. ஆனால் அந்த பாத்திரத்தில் இருந்து சிறுத்தையால் அதன் தலையை விடுவிக்க முடியவில்லை.

அந்த சிறுத்தை சுமார் 5 மணி நேரமாக பாத்திரத்திற்குள் தலையை விட்டு சிக்கித் தவித்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்ததோடு அதன் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தையும் அகற்றினர்.


Next Story