வடமேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!


வடமேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
x

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

புதுடெல்லி,

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் விதர்பா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஆந்திராவில் இன்றும் நாளையும், தெலுங்கானாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story