திருமணத்துக்கு மறுத்ததால் காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற மைனர்பெண்


திருமணத்துக்கு மறுத்ததால் காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற மைனர்பெண்
x

திருமணத்துக்கு மறுத்ததால் காதலனுடன் சேர்ந்து தாயை மைனர்பெண் கொல்ல முயன்ற சம்பவம் உப்பள்ளியில் நடந்துள்ளது.

உப்பள்ளி;

போக்சோவில் கைது

தார்வார் மாவட்டம் உப்பள்ளி உபநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜேஜாமாய்(வயது 45). இவர் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகள் 17 வயது மைனர்பெண். ஜேஜாமாயின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர், தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் மைனர்பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த பரசுராம் லமானி (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு ஜேஜாமாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜேஜாமாயிக்கு தெரியாமல் மைனர்பெண், தனது காதலன் பரசுராமுடன் சேர்ந்து கோவாவுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து ஜேஜாமாய், உப்பள்ளி போலீசில் பரசுராம் மீது கடத்தல் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பரசுராமை கைது செய்தனர். மேலும் மைனர்பெண்ணையும் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

கத்திக்குத்து

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பரசுராம், நேற்று முன்தினம் இரவு ஜேஜாமாயின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மைனர்பெண்ணின் தாயிடம் உங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அதற்கு ஜேஜாமாய் மறுத்துள்ளார். இந்த நிலையில், காதலனுடன் சேர்ந்து மைனர்பெண்ணும் தாயிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜேஜாமாயை தாக்கி உள்ளனர்.

பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மைனர்பெண்ணும், பரசுராமும் சேர்ந்து ஜேஜாமாயை சரமாரியாக குத்தினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜேஜாமாய், ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

போலீஸ் வலைவீச்சு

இதையடுத்து மைனர்பெண்ணும், பரசுராமும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜேஜாமாயை மீட்டு சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அதாவது மைனர்பெண் மீது கொலை முயற்சி வழக்கும், பரசுராம் மீது கொலை முயற்சி, கொைல செய்ய தூண்டுதல், போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலனுடன் சேர்ந்து ெபற்ற தாயை மைனர்பெண் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story