வயநாடு வனப்பகுதியில் 142 ஆண்டுகளுக்கு பின் மண்ணுக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு


வயநாடு வனப்பகுதியில் 142 ஆண்டுகளுக்கு பின் மண்ணுக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு
x

பாலக்காடு:

வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே பெம்பரமலை பகுதி உள்ளது. இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1400 அடி உயரத்தில் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் சிலர் வனப்பகுதியில் மண்ணை தோண்டி கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மண்ணுக்குள் இருந்து வந்த தங்க கவசவாலன் என்ற அதிசய பாம்பு பிடிபட்டு உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தங்க கவசவாலன் எனும் இந்த பாம்பு, 142 ஆண்டுகளுக்கு பின்னர் வனப்பகுதியில் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1880-ம் ஆண்டு இதேபோல் ஒரு பாம்பு பிடிபட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் பாம்பு குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.


Next Story