கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று?


கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று?
x

குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு சுகாதரத்துறையினர் பரிசோதனை செய்தனர். மேலும் பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைபடுத்திக்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


Next Story